சுறா மீன் கடித்ததால் ஒரு கையை இழந்த நிலையில் ஒற்றை கையுடன் அலை சறுக்கில் அசத்தும் அமெரிக்க வீராங்கனை "பெத்தானி"..

0 6182
உலக அலைசறுக்கு லீக் தொடரில், சுறா மீன் கடித்ததால் ஒரு கையை இழந்த அமெரிக்க வீராங்கனை பெத்தானி சிறப்பாக செயல்பட்டு 16 பேர் போட்டியிடும் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

உலக அலைசறுக்கு லீக் தொடரில், சுறா மீன் கடித்ததால் ஒரு கையை இழந்த  அமெரிக்க வீராங்கனை பெத்தானி சிறப்பாக செயல்பட்டு 16 பேர் போட்டியிடும் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

சுறா மீன் கடித்ததால் 13 வயதிலேயே ஒரு கையை இழந்த பெத்தானி, மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டதால் பல முக்கிய போட்டிகளில் வாகை சூடியுள்ளார்.

3 சிறுவர்களுக்குத் தாயான பெத்தானி தற்போது சொந்த ஊரான ஹவாயில் நடைபெறும் அலைசறுக்கு தொடரின் எலிமினேஷன் சுற்றில் 2வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அலைகளுக்கு மத்தியில் சீறிப்பாய்ந்த பெத்தானிக்கு உள்ளூர் ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி உற்சாகமூட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments